November 25, 2026
தேசியம்
செய்திகள்

கனடா ஒரு இறையாண்மை கொண்ட நாடு: அமெரிக்க யுத்த அமைச்சகத்திற்குப் பாதுகாப்பு அமைச்சர் பதிலடி!

கனடியர்கள் அமெரிக்காவுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல என Pentagon விமர்சனத்திற்கு கனடியப் பாதுகாப்பு அமைச்சர் David McGuinty பதிலளித்தார்.

கனடா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என நினைவு படுத்திய  அமைச்சர் David McGuinty, நாங்கள் அமெரிக்காவுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல என Pentagon விமர்சனத்திற்கு கனடியப் பாதுகாப்பு அமைச்சர் அதிரடியாகப் பதிலளித்தார்.

வாராந்த அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் அமெரிக்காவுக்குக் கட்டுப்பட்டு அறிக்கை சமர்ப்பிப்பவர்கள் அல்ல என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

Pentagan-னின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலையே நேரடியாக பிரதிபலிப்பதாக அமைச்சர் David McGuinty கூறினார்.

இராணுவத் திறனை விட உள்நாட்டு பொருளாதார, வணிக நலன்களுக்கு கனடா முன்னுரிமை அளிப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான Pentagon அண்மையில் பகிரங்கமாக குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு வாகனத் திருட்டு விசாரணைகளில் நான்கு பேர் கைது

Lankathas Pathmanathan

குடியேற்ற ஆர்ப்பாட்ட மோதலில் பத்து பேர் கைது

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 30ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment