தேசியம்
செய்திகள்

குடியேற்ற ஆர்ப்பாட்ட மோதலில் பத்து பேர் கைது

Toronto-வில் நிகழ்ந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமை (13) மாலை இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

“Canada First Rally” என்ற குழு Toronto-வின் Christie Pits பூங்கா பகுதியில் கூடி பெருமளவிலான குடியேற்றத்தை நிறுத்த சனி மாலை வலியுறுத்தினர்.

இந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்தை எதிர்க்க நூற்றுக்கணக்கான குடியேற்ற ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களும் அந்த இடத்தில் கூடினர்.

இந்த இரு குழுக்களும் அங்கு மோதிக்கொண்டன.

இதில் தாக்குதல் நடத்தியதற்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்த விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.

இந்தக் கைதுகள் குறித்த மேலதிக  விவரங்களை எதிர்வரும் நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\\

Related posts

பிரதமரை பதவி விலகுமாறு கோரவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Lankathas Pathmanathan

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 500,000 குழந்தைகள் மருந்து

Lankathas Pathmanathan

புதிய ஒப்பந்தத்தை Air கனடா விமான பணியாளர்கள் நிராகரிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment