September 23, 2026
தேசியம்
செய்திகள்

சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி

Manitoba-வில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

மிதக்கும் விமானம் விபத்துக்குள்ளானதில் St. Theresa Point முதல் குடியின பகுதியை சேர்ந்த நான்கு பேர் பலியாகினர்.

இந்த விமானம் தண்ணீரில் தரையிறங்க வேண்டியிருந்தது எனவும் அது ஏரிக்கு வடக்கே நிலத்தில் மோதியதாக Manitoba RCMP தெரிவித்தது.

சனிக்கிழமை  (13) மாலை வடகிழக்கு Manitoba பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக RCMP தெரிவித்தது.

இதில் பயணிகளான நான்கு பேர் சம்பவ இடத்தில் இறந்து விட்டதாக RCMP தெரிவித்தது.

கொல்லப்பட்டவர்களில் 49 வயதுடைய ஒரு ஆண், 50 வயதுடைய இரண்டு பெண்க, 53 வயதுடைய ஒரு ஆண் அடங்குகின்றனர்.

ஆனால் பலியானவர்களின் விபரங்கள் வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தில் 20 வயதுடைய விமானிக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

 

Related posts

புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமரினால் நியமனம்

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 151 தென் கொரியா தீயணைப்பு படையினர் கனடாவில்

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec தயார்!

Gaya Raja

Leave a Comment