தேசியம்
செய்திகள்

தலைமையை இழப்பாரா Bonnie Crombie?

Ontario Liberal கட்சி இந்த வார இறுதியில் தலைமைத்துவ வாக்கெடுப்பை நடத்துகின்றது.

Liberal கட்சி அதன் வருடாந்த பொதுக் கூட்டத்திற்காக Toronto-வில் கூடுகிறது.

கடந்த February மாதம் நடைபெற்ற தேர்தலின் பின்னர் நடைபெறும் முதலாவது பொதுக் கூட்டம் இதுவாகும்.

கடந்த தேர்தலில் Liberal கட்சி மீண்டும் அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தை பெற்றாலும், சட்டமன்றத்தில் கட்சி தலைவர் Bonnie Crombie ஆசனம் ஒன்றை பெறத் தவறினார்.

இந்த நிலையில் Bonnie Crombie-யின் தலைமை குறித்து சில கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மற்றொரு தலைமைப் போட்டியை நடத்துவதா அல்லது  Bonnie Crombie தலைமையில் கட்சியை வழி நடத்துவதா என்பது குறித்து கட்சி உறுப்பினர்கள் வார இறுதி முழுவதும் வாக்களிக்கின்றனர்.

இந்த வாக்களிப்பு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (14) அறிவிக்கப்படவுள்ளது.

Related posts

விமானச் சேவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க WestJet முடிவு

Lankathas Pathmanathan

புதிய ஆளுநர் நாயகம் செவ்வாய் அறிவிக்கப்படுவார்?

Lankathas Pathmanathan

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ரீதியான முரண்கள் உள்ளன: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment