தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் முன்னாள் தலைவர் பதவி விலகல்

Conservative கட்சியின் முன்னாள் தலைவர் Erin O’Toole அரசியலில் இருந்து விலகுகின்றார்.

வெள்ளிக்கிழமை (31) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்தார்.

மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் இலை துளிர் காலத்தில் தனது பதவியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Ontario மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான Erin O’Toole, Conservative கட்சிக்கு தலைமை தாங்கி August 2020 முதல் February 2022 வரை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார்.

Erin O’Tooleஇன் பதவி விலகல் அறிவிப்பை தொடர்ந்து அவரது பல வருட சேவைக்கு Conservatives கட்சியின் தலைவர் Pierre Poilievre நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

Erin O’Toole இடமிருந்து Conservative கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்ற நீண்டகால Manitoba மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் Candice Bergen கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Related posts

கனடாவின் கவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவினால் மாற்றமடையாது – அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Kirsten Hillman

Lankathas Pathmanathan

COVID எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

கனடாவில் COVID மரணங்கள் 34 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment