September 29, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவில் COVID மரணங்கள் 34 ஆயிரத்தை அண்மிக்கிறது

Ontarioவில் திங்கட்கிழமை (31) மேலும் 32 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன.

இரண்டு வாரங்களில் திங்களன்று முதன்முறையாக Ontarioவில் 3,000க்கும் குறைவானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை 2,983 பேர் தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் குறைந்தபட்சம் 583 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தெரியவருகிறது

நாடளாவிய ரீதியில் திங்கள் இரவு வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,713 ஆக பதிவாகியுள்ளது.

இதுவரை கனடாவில் 33,873 COVID  மரணங்களும் பதிவாகியுள்ளன.

Related posts

நான்காவது Conservative வேட்பாளர் தகுதி நீக்கம்!

Lankathas Pathmanathan

மேலதிகமான AstraZeneca தடுப்பூசிகளை ;கனடா பிற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்

Gaya Raja

Quebec தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் Legault

Lankathas Pathmanathan

Leave a Comment