September 29, 2026
தேசியம்
செய்திகள்

Donald Trump மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால் கனடாவுக்கு பாதிப்பு?

அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக Donald Trump தெரிவானால் அது கனடாவுக்கு பாதிப்பாக அமையும் என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு Edmonton நகரில் நடைபெறுகிறது.

இந்த சந்திப்பில் கலந்து கொள்ளும் NDP தலைவர் Jagmeet Singh, அரசியல் எதிரிகளை பழிவாங்கும் சுயநலவாதியாக Donald  Trumpபை குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் Joe Biden, Donald Trump மீண்டும் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறு  செவ்வாய்கிழமை அதிகரித்தது.

அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அமெரிக்கா – கனடா எல்லை பாதுகாப்பு குறித்து  கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario Liberal தலைவர் தோல்வி!

Lankathas Pathmanathan

ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் குறித்து கனடியர்களுக்கு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது: கனடிய பிரதமர்!

Lankathas Pathmanathan

Leave a Comment