அமெரிக்காவுடனான கனடாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு வழக்கம் போல் தொடர்கிறது என கனடியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் David McGuinty தெரிவித்தார்.
அமெரிக்கப் பாதுகாப்புத்துறை செயலர் Pete Hegseth விடுத்ததாக கூறப்படும் Pentagon குறிப்பு தொடர்பான அறிக்கை இரு நாடுகளின் பாதுகாப்பு வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவுடனான இராணுவ ஒத்துழைப்பிற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலர் Pete Hegseth இரகசியக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்தி வெளியானது.
இந்த அறிக்கை குறித்து வெளியான செய்திகளுக்கு, Halifax சர்வதேசப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள David McGuinty, அமெரிக்கத் தலைவர்கள் பதிலளித்துள்ளனர்
குறிப்பிட்ட ஆவணத்தை தான பார்க்கவில்லை என செய்தியாளர்கள் மத்தியில் கூறிய David McGuinty, அமெரிக்காவுடனான கனடாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு வழக்கம் போல் தொடர்கிறது என தெரிவித்தார்.
Pete Hegseth இரகசியக் குறிப்பு குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் கனடியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் David McGuinty தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, உளவுத்துறை ஆகியவற்றில் கனடா – அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதைக் கனடியர்களுக்கும், இது குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் தன்னால் உறுதியளிக்க முடியும் என David McGuinty கூறினார்.
Halifax பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்காவின் இரு கட்சி மேலவை உறுப்பினர்களும், அந்த இரகசியக் குறிப்பை தாங்கள் பார்க்கவில்லை என கூறியதோடு, இத்தகைய செய்திகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த உதவாது என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
