கனடாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அண்மித்துள்ளதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் கனடாவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு “மிக அருகில்” உள்ளதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் வர்த்தக வரி போருக்கு மத்தியில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் இந்தக் கருத்து ஞாயிற்றுக்கிழமை (22) வெளியானது.
இது இரு தரப்பும் வர்த்தகப் பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டத்தை எட்டியுள்லதை பிரதிபலிக்கிறது.
கடந்த வாரம் சீனாவில் நடைபெற்ற APEC உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி Donald Trump , கனடியப் பிரதமர் Mark Carney ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து, இரு நாட்டு வர்த்தக பிரதிநிதிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் மிக அருகில் இருப்பதாக Jamieson Greer கூறியுள்ளார்.
