ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றில் அதன் முதலாவது “இணை உறுப்பினர்” நாடாக மாறுவதற்கு கனடா முயற்சித்து வருவதாக கனடிய பிரதமர் Mark Carney அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
Montreal உச்சிமாநாட்டில் இந்த அறிவித்தலை Mark Carney அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
எதிர்வரும் June மாதத்திற்குள் இதற்கான பேச்சுவார்த்தைகளை முடிக்க பிரதமர் இலக்கு வைத்துள்ளார்.
27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துடன் கனடா மேற்கொள்ளவிருக்கும் மிக நெருக்கமான கூட்டாண்மைக்கும் மிக உறுதியான அறிவிப்பாக இது அமைகிறது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen இதற்கு ஆதரவு அளித்தாலும், ஐரோப்பாவிற்குள் இதற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறிப்பாக கனடா “இணை உறுப்பினர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை ஜெர்மனி கடுமையாக எதிர்த்துள்ளது.
இதன் காரணமாக, Montreal உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ கூட்டு அறிக்கையிலிருந்து “இணை உறுப்பினர்” என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “முழு உறுப்பினர் அல்லாத, கனடாவின் மிக நெருக்கமான கூட்டாண்மை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
