உலகளவில் கனடிய வர்த்தகத்தை அதிவேகமாக விரிவாக்கும் முயற்சிகளில் பிரதமர் Mark Carney தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கனடா – அமெரிக்கா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், கனடிய பிரதமரின் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பணியாமல் கனடா தனது தற்சார்பை நிலைநாட்ட Mark Carney தொடர்ந்து சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டு புதிய கூட்டணிகளை உருவாக்கி வருகிறார்:
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிலான பிரம்மாண்ட வர்த்தகக் குழு மூலம் இந்தியாவுடன் $300 மில்லியன் மதிப்புள்ள 30 புதிய வணிகக் கூட்டணிகள் கையெழுத்தாகியுள்ளன.
எதிர்வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை $70 பில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு துறைகளில் துருக்கியுடன் 3 ஆண்டுகால புதிய வியூகக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை பிரதமர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
Montreal நகரில் இந்த வாரம் கனடா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு முன்னெடுக்கப்பட்டது.
இதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சந்தையுடன் தொழில்துறை வர்த்தகத்தை விரிவாக்க புதிய உத்திகள் வகுக்கப்பட்டன.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில் இந்நகர்வுகல் முன்னெடுக்கப்படுகிறது.
அமெரிக்க தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தம் சாத்தியமா என்ற இழுபறி நிலை தொடர்ந்து நீடித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
