தேசியம்
செய்திகள்

எரிபொருள் விலையில் பெரும் மாற்றம்: Mark Carney அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

எரிபொருள் (Gas) மீதான வரி விலக்கு திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டிக்க  Mark Carney அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நிதி அமைச்சர் François-Philippe Champagne புதன்கிழமை (02) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த அதிரடி நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த வரிச் சலுகை 2027 January 31 வரை நீட்டிக்கப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்தார்.

அதன் பின்னர், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த வரி வழக்கமான விகிதத்தில் பாதியாகக் குறைக்கப்படும்.

2027 April 1 முதல் இந்த வரி முழுமையாக மீண்டும் அமுல்படுத்தப்படும் என  François-Philippe Champagne தெரிவித்தார்.

இந்த முடிவு வாகன ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இந்த மாத இறுதியில் Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும்!

Gaya Raja

COVID தொற்று Ontarioவில் மீண்டும் பரவ ஆரம்பிக்கும் அறிகுறிகள்

Lankathas Pathmanathan

நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலய வெடி விபத்தில் 2 பேர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment