தேசியம்
செய்திகள்

பாடசாலைகளில் நேரடி கல்வி ஆரம்பிப்பதை தாமதப்படுத்தும் மாகாணங்கள்

மாகாணங்கள் பலவும் பாடசாலைகளில் நேரடி கல்வி ஆரம்பிப்பதை தாமதப்படுத்தி வருகின்றன.
அதிக அளவில் பரவக்கூடிய Omicron   மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந் நடவடிக்கை எடுக்கப்படுகிறது
Manitoba மாகாணம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு நேரில் திரும்பும் திகதியை தாமதப்படுத்துகிறது.

கல்வி அமைச்சர் Cliff Cullen செவ்வாய்க்கிழமை (04) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

Manitobaவில் விடுமுறையை தொடர்ந்து மாணவர்கள் January மாதம் 10ஆம் திகதி மீண்டும் பாடசாலைக்கு திரும்ப இருந்தனர்.

ஆனாலும் COVID தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு வார கால இணைய மூலம் கல்வியை மாகாணம் அரசாங்கம் அறிவித்து

இந்த நிலையில் இணைய கல்வியை January மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்க Manitoba மாகாணம் முடிவு செய்துள்ளது.

இந்த ஒரு வாரம், புதிய நடவடிக்கைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்தவும், எதிர்பார்க்கப்படும் பணியாளர் பற்றாக்குறைக்குத் தயாராகவும், பாடசாலைகளுக்கு அவகாசத்தை வழங்கும் என மாகாணம் கூறியது.

அதேவேளை Prince Edward தீவில் பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என இன்று அறிவிக்கப்பட்டது.

January 17 வரை பாடசாலைகளை தொடர்ந்து மூடி வைக்க மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது

முதல்வர் Dennis King செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார்

Related posts

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

Lankathas Pathmanathan

Conservative தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் 679 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்

Lankathas Pathmanathan

Halifax பாடசாலை கத்தி குத்து குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 15 வயது மாணவர்

Lankathas Pathmanathan

Leave a Comment