தேசியம்
செய்திகள்

Halifax பாடசாலை கத்தி குத்து குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 15 வயது மாணவர்

Halifax பாடசாலையில் நிகழ்ந்த கத்தி குத்து தொடர்பான குற்றச்சாட்டை 15 வயது மாணவர் எதிர்கொள்கிறார்

Nova Scotia மாகாண உயர்நிலைப் பாடசாலையில் திங்கட்கிழமை (20) மூவர் கத்தி குத்து காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்த சம்பவம் குறித்த குற்றச் சாட்டில் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார்.

காயமடைந்தவர்களில் இரண்டு பாடசாலை ஊழியர்களும் கைது செய்யப்பட்ட மாணவனும் அடங்குகின்றனர்.

இதில் கைது செய்யப்பட்ட மாணவர், இரண்டு கொலை முயற்சிகள் உட்பட மொத்தம் 10 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

காயமடைந்த இரண்டு பாடசாலை ஊழியர்களும் உயிர் ஆபத்தற்ற நிலையில் மருத்துவமனையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் தடை அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

230 வாக்குகளால் 2ஆம் இடத்தில் தமிழர் – முழுமையான முடிவு புதன்கிழமை இரவு வெளியாகும்!

Gaya Raja

கனடாவின் சில பகுதிகளில் இந்த வாரம் எரிபொருள் விலை குறையும்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!