தேசியம்
செய்திகள்

Ontarioவில் மேலும் புதிய COVID கட்டுப்பாடுகள்

Ontario திங்கட்கிழமை (03) மேலும் புதிய COVID கட்டுப்பாடுகளை அறிவித்தது.

பாடசாலைகளை இணைய கற்றலுக்கு நகர்த்துதல், உணவகங்களில் உணவு உண்பதை தடை செய்தல் உட்பட பல புதிய பொது சுகாதார நடவடிக்கைகளை Ontario அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

புதன்கிழமை அதிகாலை 12:01 முதல் இந்த கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.

முதல்வர் Doug Ford திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

மீண்டும் திறக்கப்படும் திட்டத்தின் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாவது நிலைக்கு Ontario திரும்புவதாக அவர் அறிவித்தார்.

பாடசாலைகளை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நேரடி கல்விக்கு மூடுவதாக இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டது.

உட்புற சந்திப்புகளில் ஐந்து பேரும் வெளிப்புற சந்திப்புகளில் பத்துப் பேரும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

உட்புறத்தில் நடைபெறும் திருமணங்கள், இறுதிச் சடங்குகள், மதச் சடங்குகளில் 50 சதவீதத்தினர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனவும் Ford அறிவித்தார்.

புதிய கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக அனைத்து அவசரமற்ற சிகிக்சை நடைமுறைகளையும் மருத்துவமனைகள் இடைநிறுத்துகின்றன.

சுனாமி போல பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்த இந்த புதிய கட்டுப்பாடுகள் அவசியம் என Ford கூறினார்.

January 5ஆம் திகதி நடைமுறைக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள் 21 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என கூறப்படுகிறது.

மருத்துவமனைகளின் அழுத்தத்தை எளிதாக்கும் வகையில் சமீபத்திய தொற்றின் பரவலை மழுங்கடிப்பதே இந்த நடவடிக்கைகளின் உடனடி குறிக்கோள் என இந்த செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Ford கூறினார்.

Related posts

பெயர் மாற்றம் பெறும் Ryerson பல்கலைக்கழகம்  

Lankathas Pathmanathan

தொற்றை எதிர்த்துப் போராட, அமெரிக்காவுடன் கனடா நெருக்கமாக செயல்படுகின்றது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

உக்ரைனில் கனேடிய ஆயுதப் படைகள் போரில் ஈடுபடாது: பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment