தேசியம்
செய்திகள்

Quebec அனுப்பப்பட்ட கனடிய ஆயுதப் படையினர்

Quebecகில் COVID தடுப்பூசி பிரச்சாரத்திற்கு உதவ மத்திய அரசு கனடிய ஆயுதப் படைகளை அனுப்புகிறது.
அவசரகால தயார்நிலை அமைச்சர் Bill Blair திங்கட்கிழமை (03) காலை இதனை அறிவித்தார்.
மத்திய அரசின் உதவிக்கான Quebecகின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மாகாணத்தின் தடுப்பூசி பிரச்சாரத்திற்கு ஆதரவை வழங்க கனடிய ஆயுதப் படையினர் இன்று தமது  பணியமர்த்தலை ஆரம்பிப்பார்கள் என அவர் கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் Quebecகின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்று எதிர்ப்பு நடவடிக்கைக்கு மாகாணத்திற்கு உதவுவதற்கு தேவையான வளங்கள் குறித்து தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Quebec மாகாணத்தில் பலர் தடுப்பூசிக்காக பல மணிநேரம் வரிசையில் நின்ற காட்சிகள் ஊடகங்கள் ஊடாக பதிவாகி வருகின்றன
மூன்றாவது தடுப்பூசியை 18 வயதிற்கு  மேற்பட்ட அனைத்து Quebec வாசிகளும் பெறலாம் என கடந்த வாரம் Quebecமாகாணம் அறிவித்தது.

Related posts

PC கட்சி பல முக்கிய பிராந்தியங்களில் முன்னணியில் உள்ளது: புதிய கருத்துக் கணிப்பு!

Lankathas Pathmanathan

Albertaவின் இறையாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணையை தலைமை தாங்க நீதிபதி நியமனம் ?

Lankathas Pathmanathan

Leave a Comment