Alberta பிரிவினைக்கு எதிராக வாக்களித்துள்ளதாக முதல்வர் Danielle Smith தெரிவித்தார்.
முன்கூட்டிய வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தனது வாக்கை பதிவு செய்த முதல்வர், மாகாண மக்கள் அனைவரும் பிரிவினைக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரினார்.
அதே நேரத்தில் தங்களின் உரிமைகளை நிலைநாட்ட ஏனைய 9 கேள்விகளுக்கு ‘ஆம்’ என ஆதரவளிக்குமாறு Danielle Smith கேட்டுக்கொண்டுள்ளார்.
Alberta மாகாணம் கனடிய மத்திய அரசுடன் கொண்டுள்ள பொருளாதார முரண்பாடுகள் காரணமாக இந்த 10 கேள்விகள் அடங்கிய பொது வாக்கெடுப்பை Danielle Smith அரசாங்கம் முன்னெடுத்தது.
இதனால் அவர் பிரிவினைக்கு ஆதரவாக செயல்படக் கூடும் எனப் பரவலாக கருதப்பட்டது.
ஆனால், தற்போது தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர் Alberta பிரிவினைக்கு எதிராக வாக்களிக்குமாறு மாகாண வாக்காளர்களை அவர் கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது
தான் ஒருபோதும் கனடாவை விட்டு Alberta பிரிந்து செல்வதை விரும்பவில்லை என செய்தியாளர்களிடம் கூறிய Danielle Smith . மாகாணம் கனடாவுக்குள் வலிமையான அங்கமாக நீடிக்க வாக்களித்துள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்,
Alberta பிரிவினை குறித்த இறுதி பொதுவாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த வாரம் முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
