கனடா Wonderland பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள இரண்டு இராட்சத roller coasters தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் Georgia Six Flags பொழுதுபோக்கு பூங்காவில் நேரிட்ட உயிரிழப்பு விபத்தைத் தொடர்ந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Wonderland பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள Behemoth, Leviathan ஆகிய இரண்டு இராட்சத roller coasters தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன,
இவை போன்ற ஒத்த வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட பிற பொழுதுபோக்கு பூங்கா இராட்டினங்களை தற்காலிகமாக மூட Six Flags குழுமம் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை Wonderland பேச்சாளர் Grace Peacock வெளியிட்டார்.
அமெரிக்காவின் Georgia Six Flags பொழுதுபோக்கு பூங்காவின் Goliath roller coaster சவாரியின் போது திங்கட்கிழமை (12) நேரிட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாகப் பலியானதுடன், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்க விபத்தில் சிக்கிய roller coasterரின் அதே வடிவமைப்பு, உள்கட்டமைப்பைக் கொண்ட சவாரிகள் Wonderland பொழுதுபோக்கு பூங்காவில் பயன்பாட்டில் உள்ளதால், பயணிகளின் பாதுகாப்பை கருதி இரண்டு சவாரிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
