தேசியம்
செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விரும்பும் கனடிய பெண்!

34 வயதான Arora Akankusha என்ற கனடிய பெண், ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். 
Arora Akankusha தனது முயற்சியில் வெற்றி பெற்றால், 75 ஆண்டு கால வரலாற்றில் இந்த சர்வதேச அமைப்பை வழி நடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுவார். அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையை அதே 75 ஆண்டு கால வரலாற்றில் வழி நடத்திய முதல் மில்லினியலாகவும் (millennial) அவர் இருப்பார்.

“நான் ஐ.நா.வை நம்புகிறேன், அது உருவாக்கப்பட்ட நோக்கத்தையும்  நான் நம்புகிறேன்” என்றார் Arora Akankusha. “ஆனால் ஐ.நா இன்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய வழியில் சேவை செய்யவில்லை” என்பது அவரது விமர்சனமாக உள்ளது. “எங்களுக்கு ஒரு புதிய ஐ.நா. தேவை என்றும் அது இன்றே தேவை “என்றும் கூறுகிறார் இவர்.

ஐக்கிய நாடுகளின் விதிகளின் கீழ், ஒரு வேட்பாளர் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட ஒரு உறுப்பு நாட்டிலிருந்து வேட்பு மனுவை பெற வேண்டும். அதற்காக கனடாவின் ஐ.நா. தூதரான Bob Raeயை, Arora Akankusha சந்தித்துள்ளார். அந்த சந்திப்புஒரு நம்பகமான உரையாடலாக அமைந்தது என அவர் கூறினார். இந்த நிலையில் தனக்கான ஆதரவை கனடா வழங்குமா என்பதற்கான பதிலுக்காக  Arora Akankusha காத்திருக்கின்றார்.

இந்தப் பதவிக்கு போட்டியிடும் Arora Akankushaவின் அனுபவம் குறித்த கேள்வி பலருக்கும் உள்ளது. ஆனாலும் “அனுபவம் எப்போதும் பலன்களை வழிவகுக்காது” என்கிறார் Arora Akankusha. “ஒரு பகுதியில் உங்களுக்கு அதிக அனுபவம் இருந்தால், நீங்கள் அமைப்பின் கருத்துக்களுடன் ஒட்டிக் கொள்ளலாம்,” பின்னர்,  “நீங்கள் வித்தியாசமாக சிந்திக்க கூட முடியாது” என்று பதில் அளிக்கிறார் அவர்.

Related posts

Ontarioவில் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல்

கனடா எதிர்கொள்ளும் மிகவும் தீவிரமான சூழ்நிலை: பிரதமர் விளக்கம்

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை ஆரம்ப ஆட்டத்தில் கனடிய அணி தோல்வி

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!