Toronto நகர சபைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றுப் புதிய சாதனை படைத்துள்ளனர்.
Toronto நகரசபைத் தேர்தலில் October 6 முதல் 11 வரை முன்கூட்டிய வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த 6 நாட்களுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில் 2,22,550 தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்
இது கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற நகரசபைத் தேர்தலின் முன்கூட்டிய வாக்குப்பதிவோடு ஒப்பிடும்போது இரட்டிப்பானதாகும்.
2022-ம் ஆண்டு நடைபெற்ற நகரசபைத் தேர்தலின் முன்கூட்டிய வாக்குப்பதிவில் 1,15,911 பேர் வாக்களித்திருந்தனர்.
இந்த 6 நாட்கள் வாக்குப்பதிவில், இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை (11) மட்டும் ஒரே நாளில் 53,363 Toronto வாசிகள் வாக்களித்துள்ளனர்.
Toronto நகரசபை வரலாற்றில் ஒரே நாளில் அதிகமான வாக்குகள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் பதிவாவது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன்னர் 2023-ல் ஒரே நாளில் 38,621 வாக்குகள் பதிவானது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
6 நாள் வாக்குப்பதிவு விவரம்:
• October 6 (செவ்வாய்): 36,743 வாக்காளர்கள்
• October 7 (புதன்): 31,018 வாக்காளர்கள்
• October 8 (வியாழன்): 28,666 வாக்காளர்கள்
• October 9 (வெள்ளி): 33,579 வாக்காளர்கள்
• October 10 (சனி): 39,181 வாக்காளர்கள்
• October 11 (ஞாயிறு): 53,363 வாக்காளர்கள்
முன்கூட்டியே வாக்களிக்கத் தவறியவர்களுக்கான இறுதித் தேர்தல் வாக்களிப்பு October 26 நடைபெறவுள்ளது.
தவிரவும் அஞ்சல் வழி வாக்குப்பதிவு முறையை தேர்ந்தெடுத்தவர்கள், தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட வாக்குச்சீட்டுகளை புதன்கிழமை (14) மதியம் 12 மணிக்குள் தேர்தல் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Toronto நகர முதல்வருக்கான தேர்தலில் தற்போதைய முதல்வர் Olivia Chow , அவரது பிரதான எதிர் வேட்பாளர் நகரசபை உறுப்பினர் Brad Bradford ஆகிய இரு முக்கிய வேட்பாளர்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் முன்கூட்டிய வாக்குப்பதிவில் ஏற்றபட்டுள்ள அதிகரிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
