Alberta மாகாணத்திற்கான $8 பில்லியன் இராணுவ உள்கட்டமைப்பு நிதி ஒதுக்கீடு வெளியானது.
கனடிய தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் David McGuinty இந்த அறிவித்தலை புதன்கிழமை (07) வெளியிட்டார்.
Alberta முதல்வர் Danielle Smith, மத்திய அமைச்சர் David McGuinty இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த பாதுகாப்பு நிதித் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
Alberta மாகாணத்தில் சுதந்திரப் பொதுவாக்கெடுப்பு இரண்டு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
Alberta மாகாணத்தில் $8 பில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட இராணுவ உள்கட்டமைப்பு நிதி ஒதுக்கீட்டை அமைச்சர் David McGuinty அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
கனடாவின் ஒட்டுமொத்த இராணுவ பலத்தை உலகளவில் மீளக்கட்டியெழுப்பும் உத்தியின் கீழ் இந்தத் திட்டம் அமைகிறது.
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், கூட்டாட்சி என்பது தற்செயலானது அல்ல என குறிப்பிட்டார்.
Alberta மாகாணத்தில் சுதந்திரப் பொதுவாக்கெடுப்பு குறித்த தேர்தல் எதிர்வரும் 19-ஆம் திகதி நடைபெறுகிறது.
இந்தப் பின்னணியில் மத்திய அரசின் அறிவிப்பை முழுமனதாக வரவேற்றுப் பேசிய Danielle Smith, இம்மாபெரும் நிதி ஒதுக்கீடு Alberta-வை நாட்டின் வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பின் முதன்மை மையமாக மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
