தேசியம்
செய்திகள்

கனடியக் கவிஞருக்கு 2026-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான Nobel பரிசு!

கனடியக் கவிஞர் Anne Carson 2026-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான Nobel பரிசை வெற்றி பெறுகிறார்.

இந்த அறிவிப்பு வியாழக்கிழமை (08) அதிகாரப்பூர்வமாக வெளியானது.

Sweden நாட்டின் Stockholm நகரில் வியாழன்று நடைபெற்ற விழாவில் Swedish Academy இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பண்டைய கிரேக்கக் கலாச்சாரத்தையும் நவீன இலக்கிய வடிவங்களையும் மிக நேர்த்தியாக இணைத்துப் புதிய இலக்கியப் பாதையை உருவாக்கியதற்காக 76 வயதான Anne Carson-க்கு இந்த உயரிய உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

சிறுகதை எழுத்தாளர் Alice Munro (2013), இலக்கியத்திற்கான Nobel பரிசை வெற்றி பெற்றதன் பின்னர், இந்தப் பரிசை வெல்லும் இரண்டாவது கனடியப் பெண்மணி என்ற வரலாற்று சிறப்பை Anne Carson பெறுகிறார்.

Toronto நகரில்  1950-ஆம் ஆண்டு Anne Carson பிறந்தார்.

அவர் உலகப் புகழ்பெற்ற McGill, Michigan, Princeton பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், பண்டைய கிரேக்க நூல்களின் மொழிபெயர்ப்புகள் என 20-க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.

இந்த Nobel பரிசுக்கு முன்பாக அவர் பல விருதுகளை பெற்றுள்ளார்.

இலக்கியத்திற்கான Nobel பரிசுடன் avaruku $1.7 மில்லியன் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

Related posts

Brian Mulroney கனடிய அரசியலின் ‘சிங்கம்’ !

Lankathas Pathmanathan

புதிய வீடுகள் முதன்முறையாக கொள்வனவு செய்பவர்களின் அடமானங்களுக்கு 30 வருட கடன் அனுமதி?

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெற்ற நிலையின் அடிப்படையில் சர்வதேச பயணிகள் பிரிக்கப்பட மாட்டார்கள் – இரண்டு கனேடிய விமான நிலையங்கள் முடிவு

Gaya Raja

Leave a Comment