வரவிருக்கும் மாதங்களில் diesel விலை litre ஒன்றிற்கு $2-க்கும் கீழ் குறைய வாய்ப்பு என எதிர்வு கூறப்படுகிறது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு வரும் தளர்வுகள் காரணமாக இந்த விலை குறைவு சாத்தியக்கூறுகள் எதிர்வு கூறப்படுகிறது.
கனடாவில் வரவிருக்கும் மாதங்களில் diesel விலை litre ஒன்றிற்கு $2-க்கும் கீழ் குறைய வாய்ப்புகள் உள்ளதாக எரிசக்தித் துறை நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை சரிவு இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது.
Diesel விலை குறைந்தால், அது கனடா முழுவதும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வண்டிகளின் போக்குவரத்துச் செலவைக் கணிசமாகக் குறைக்கும் என கூறப்படுகிறது.
இது நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.
