தேசியம்
செய்திகள்

Quebec மாகாணத் தேர்தல்: பிரிவினைவாத PQ கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற வாய்ப்பு?

Québec மாகாணத் தேர்லில் Parti Québécois (PQ ) வெற்றிபெறும் என பெரும் எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை (05) நடைபெறவுள்ளது.

இதில் மாகாணத்தைப் பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் பிரிவினைவாத PQ கட்சி வெற்றி பெறும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

இந்த புதிய மக்கள் கருத்துக் கணிப்புகளில் PQ கட்சியின் தலைவர் Paul St-Pierre Plamondon தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, PQ கட்சி மாகாணத்தில் ஒரு முழுமையான பெரும்பான்மை அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளன.

Quebec சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 64 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், PQ கட்சி 67 இடங்கள் வரை வெல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

PQ கட்சி இறுதியாக 2014-ஆம் ஆண்டில் Quebec மாகாணத்தில் ஆட்சி அமைத்தது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், Quebec மாகாணத்தைப் பிரித்து தனி நாடாக மாற்றுவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துவதில் தங்களது கட்சி உறுதியாக இருக்கும் என PQ தலைவர் பிரச்சார மேடைகளில் தொடர்ந்து உறுதி அளித்து வருகிறார்.

இறுதியாக வெளியான கருத்துக் கணிப்புகள் படி, PQ கட்சி முதலிடத்திலும், Liberal கட்சி இரண்டாம் இடத்திலும், Conservative கட்சி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவின் நெருக்க நிலைக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நகர்வுகள் கனடிய மத்திய அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Quebec மாகாண தேர்தலில் ஏற்கனவே சுமார் 9,00,000 வாக்காளர்கள் (13.79%) தங்களது வாக்குகளை முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணை May இறுதிக்குள் தீர்மானிக்கப்படும்

Lankathas Pathmanathan

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மூடப்பட்ட Waterloo விமான நிலையம்

Lankathas Pathmanathan

கனடாவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்

Gaya Raja

Leave a Comment