G20 நாடுகளில் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் குறைந்தது ஒரு COVID தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையில் கனடா முதலிடத்தில் உள்ளது
கனடாவில் தகுதியான கனேடியர்களில் 70 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். இது தகுதியான கனேடியர்களில் மூன்றில் இரண்டு பகுதியாகும்.
29 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன. 26 மில்லியன் தடுப்பூசிகள் கனேடியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த வாரம் மேலும் 2.4 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன.
இதன் மூலம் கனடாவை வந்தடைந்த தடுப்பூசியின் எண்ணிக்கை 30 மில்லியனாக அதிகரிக்கின்றது.