Saskatchewanனில் உள்ள Cowessess First Nation, ஒரு முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நூற்றுக்கணக்கான புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
Marieval Indian வதிவிட பாடசாலையை சுற்றியுள்ள பகுதியின் தரையை ஊடுருவி radar மூலம் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில் நூற்றுக்கணக்கான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளின் எண்ணிக்கை கனடாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளின் எண்ணிக்கையை விட கணிசமாக அதிகரிப்பதாக இருக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு குறித்த கூடுதல் விவரங்களை Cowessess First Nation அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் வியாழக்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.