தேசியம்
செய்திகள்

Toronto வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு?

Toronto-வில் உள்ள மசூதிகள் உட்பட வழிபாட்டுத் தலங்களில் இந்த வார இறுதியில் இருந்து காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.

Toronto காவல்துறை இந்த அறிவித்தலை வெளியிட்டது.

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக ஒன்றுகூடுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக Toronto காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

நகரின் முக்கியப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேலதிக காவல்துறை பாதுகாப்பு, நேரடி கண்காணிப்பு பணிகள் இந்த வார இறுதியில் மட்டுமின்றி, அடுத்தடுத்து வரும் வாரங்களில் தொடரும் என Toronto காவல்துறை தனது X  தளத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளது.

Related posts

அதிகரிக்கும் இளையோர் வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் பாதுகாப்பு காவலில்!

Lankathas Pathmanathan

முன்னாள் Mississauga நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

Leave a Comment