தேசியம்
செய்திகள்

Toronto-வில் 10-ல் ஒருவருக்கு உணவில்லாத நிலை?

Thanksgiving உணவுப்பொதி தயாரிப்பில் முதல்வர் Doug Ford, Toronto நகர முதல்வரும் வேட்பாளருமான Olivia Chow, முதன்மை நகர முதல்வர் வேட்பாளர் Brad Bradford உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Doug Ford, Olivia Chow, Brad Bradford உள்ளிட்டவர்கள் உணவு வங்கியின் வருடாந்த Thanksgiving உணவுப்பொதி தயாரிக்கும் தொண்டுப் பணியில் சனிக்கிழமை (10) காலை கைகோர்த்துப் பங்கேற்றுள்ளனர்.

Toronto-வில் நுகர்வோரின் வாழ்வாதார நெருக்கடி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள கசப்பான உண்மைகளும், தேர்தல் மேடையின் நேரடி மோதல்களும் இந்த Thanksgiving தொண்டுப் பணியின் போது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

2026-ஆம் ஆண்டின் January முதல் August வரையிலான குறுகிய காலப்பகுதிக்குள் மட்டும், Toronto உணவு வங்கிகளுக்கு நுகர்வோரின் வருகை 2.5 மில்லியனைக் கடந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது கடந்த 2020-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு வளர்ச்சியாகும்.

தற்போதைய நிலவரப்படி, Toronto மாநகர மக்கள் தொகையில் 10-ல் ஒரு நபர் தங்களது அன்றாட உணவிற்காக உணவு வங்கிகளை மட்டுமே முழுமையாக நம்பி வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த Thanksgiving வார இறுதியில் பின்தங்கிய ஏழைக் குடும்பங்களுக்கு 185,000 pounds உணவை விநியோகிப்பதற்காக $5 மில்லியன்நிதியைத் திரட்ட உணவு வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதில் இதுவரை $2.5 மில்லியன் திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மற்றொரு தமிழ் இளைஞர் குற்றவாளியென தீர்ப்பு!

Lankathas Pathmanathan

B.C. Conservative கட்சிக்குள் அதிரடிப் புரட்சி

Lankathas Pathmanathan

Antigua and Barbudaவில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment