Toronto பெரும்பாகம், தெற்கு Ontario பகுதிகளில் எரிபொருள் விலை ஞாயிற்றுக்கிழமை (04) குறைவடையும் என எதிர்வு கூறப்படுகிறது.
வெள்ளி (02), சனிக்கிழமைகளில் (02) விலை உயர்வுக்கு பின்னர் ஞாயிற்றன்று எரிபொருள் விலை குறைய உள்ளது.
சனிக்கிழமையன்று உச்சத்தைத் தொட்ட எரிபொருளின் விலை, ஞாயிற்றுக்கிழமை கணிசமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7 சத உயர்வை தொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலை முதல் மேலும் 7 சத்தங்கள் எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்தது,
இதன் மூலம் Toronto பெரும்பாகம் முழுவதும் எரிபொருளின் விலை சராசரியாக litre ஒன்றிற்கு $1.92 ஆக உச்சத்தைத் தொட்டது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று எரிபொருளின் விலை litre ஒன்றிக்கு 7 முதல் 8 சதங்கள் வரை அதிரடியாக குறையும் என எதிர்வு கூறப்படுகிறது.
