September 29, 2026
தேசியம்
செய்திகள்

அடுத்த சில வாரங்களுக்குள் கனடாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும்: Donald Trump நம்பிக்கை

கனடாவுடன் அடுத்த சில வாரங்களுக்குள் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முடியும் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த Donald Trump, கனடாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கா முழுமையாக வெற்றி பெறும் என கூறினார்.

கனடாவின் முக்கியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் புதிய இறக்குமதித் தடைகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.

அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் கனடா அமெரிக்காவுடன் தொடர்பை ஏற்படுத்தும் எனவும் Donald Trump நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

கனடா கடந்த காலங்களில் அமெரிக்காவை மிகவும் மோசமாக நடத்தியுள்ளது எனத் தெரிவித்த அவர், கனடா அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரும் என கூறினார்.

கனடாவுடன் அமெரிக்கா ஏற்படுத்தும் புதிய ஒப்பந்தம், முற்றிலும் அமெரிக்காவுக்கு நியாயமானதாக மட்டுமே இருக்கும் எனவும் Donald Trump குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த சவாலான பேச்சுக்குக் கனடிய தரப்பில் நேரடியாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

மாறாக, தங்களின் முன்னுரிமை கனடியத் தொழிலாளர்களையும் குடும்பங்களையும் பாதுகாப்பதே ஆகும் என கனடாவின் வர்த்தகத் துறை அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார்.

எங்களின் உள்நாட்டுப் பலத்தை அதிகரிப்பதில், சர்வதேச கூட்டணிகளை விரிவுபடுத்துவதில் மட்டுமே கனடா கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறினார்.

Related posts

கனடியர்களை சூடானில் இருந்து வெளியேற்றும் விமானங்கள் நிறுத்தம்

Lankathas Pathmanathan

தற்காலிக உடன்பாட்டை எட்டியது LCBO – வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது?

Lankathas Pathmanathan

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டம்!

Lankathas Pathmanathan

Leave a Comment