September 29, 2026
தேசியம்
செய்திகள்

 $1 பில்லியன் மதிப்பிலான அமெரிக்காவின் அதிரடி இறக்குமதித் தடை 

கனடாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் $1 பில்லியன் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி  விதித்துள்ள முழுமையான தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

மதுபானங்கள், பால் பொருட்கள், motor வாகனங்கள் உள்ளிட்ட $1 பில்லியன் மதிப்பிலான பொருட்களுக்கு Donald Trump விதித்துள்ள முழுமையான தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

செவ்வாய்கிழமை (29) அதிகாலை 12:01 மணி முதல் இந்தத் தடை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

கனடாவின் தடைகளுக்கு இணையாகப் பதிலடி கொடுத்த நடவடிக்கையாக இந்த தடை அமைகிறது.

இந்தத் தடையால் பெரும் பாதிப்பை கனடிய மதுபானங்கள் எதிர்கொள்கின்றன.

இந்த நிலையில் கனடா தனது வரிகளுக்காக அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரும் என Donald Trump கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கனடாவின் வர்த்தகத் துறை அமைச்சர் Dominic LeBlanc, கனடாவின் முன்னுரிமை கனடியத் தொழிலாளர்களையும் குடும்பங்களையும் பாதுகாப்பதே ஆகும் என தெரிவித்தார்.

எங்களின் உள்நாட்டுப் பலத்தை அதிகரிப்பதில், சர்வதேச கூட்டணிகளை விரிவுபடுத்துவதில் மட்டுமே கனடா கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறினார்.

Related posts

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

Lankathas Pathmanathan

மாகாண முதல்வர்களையும், மத்திய அமைச்சரவையையும் சந்திக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

வர்த்தகப் போர் தீவிரமடைவதற்கு கனடாவே காரணம்: அமெரிக்க வர்த்தக தூதர் அதிரடி குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan

Leave a Comment