கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் புதிய குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கை வரும் காலங்களில் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
New York Times நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் கனடிய பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.
மத்திய அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அதிகாரப்பூர்வ குடியேற்ற அளவுகள் திட்டத்தை (Immigration Levels Plan) இன்னும் ஒரு மாத காலத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் Mark Carney இந்தக் கருத்தை தெரிவித்தார்.
கனடிய மத்திய அரசாங்கம் இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று தொடர்ச்சியான மத்திய குடியேற்றத் திட்டங்கள், குடியேற்றத்தை குறைப்பதில் கவனம் செலுத்தியிருந்தன.
