தேசியம்
செய்திகள்

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: Ontario இளைஞரை கைது செய்தது RCMP!

கிழக்கு Ontario பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஒரு இளைஞரை RCMP அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பொது மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் RCMP இந்த கைது நடவடிக்கை August 21 அன்று மேற்கொண்டுள்ளது.

மக்கள் அதிகம் உள்ள எல்லைப் பகுதிகளில் அசம்பாவிதம் நடக்க இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் ஒரு இளைஞர் என்பதால், கனடாவின் இளம்பருவ குற்றவியல் சட்டத்தின்படி அவரது விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இவரினால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இருப்பினும், இந்த நபரால் பொதுமக்களுக்கு ஏற்படவிருந்த “சாத்தியமான அச்சுறுத்தல்” முழுமையாகத் முறியடிக்கப்பட்டுள்ளதாக RCMP தெரிவித்தது.

இந்த நிலையில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என  அதிகாரிகள் தமது ஆரம்ப கட்ட அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை Ottawa, அதன் சுற்றுவட்டாரப் பகுதி பாதுகாப்பு பிரிவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கனடாவில் தயாரிக்கப்படும் Moderna COVID தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம்!

Lankathas Pathmanathan

இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்ட தமிழர்!

Lankathas Pathmanathan

கனடாவின் மக்கள் தொகை 40.5 மில்லியனை தாண்டியது

Lankathas Pathmanathan

Leave a Comment