தேசியம்
செய்திகள்

அமெரிக்க அதிகாரிகள் வரம்புகளை மீறுவதாக Mark Carney குற்றச்சாட்டு!

கனடாவின் உள்நாட்டு அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நிர்வாக அதிகாரிகளுக்கு பிரதமர் Mark Carney அறிவுறுத்தியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்படாத அமெரிக்க அதிகாரிகள் கனடிய அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என கனடிய பிரதமர் கூறினார்.

அமெரிக்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கனடிய அரசியலில் நிபுணர்கள் என தான் கருதவில்லை என வியாழக்கிழமை (03) Thunder Bay நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கனடா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து சுங்கவரி போர் தீவிரமடைந்து வரும் சூழலில் பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.

வர்த்தக பேச்சுவார்த்தை முறிந்த பின்னர், அமெரிக்கா தங்கள் நிபந்தனை எல்லைகளை மாற்றியுள்ளனர் எனவும் Mark Carney தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் கனடிய அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையிலும், தனது கவனம் கனடாவை வலுப்படுத்துவதில் முழுமையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் பொருளாதார, உள்நாட்டு நலன்களைப் பாதுகாப்பதே தனது முக்கிய நோக்கம் என பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அமெரிக்கத் தரப்பு தங்களின் முந்தைய நிலைப்பாடுகளையும் வரம்புகளையும் மாற்றியமைத்துள்ளதாக Mark Carney சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

21 ஆம் நூற்றாண்டின் மோசமான காட்டுத்தீ பருவத்தை கனடா எதிர்கொள்கிறது

Lankathas Pathmanathan

ஜோர்டான் மன்னர் கனடா வருகை!

Lankathas Pathmanathan

Antigua and Barbudaவில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment