September 25, 2026
தேசியம்
செய்திகள்

Ontario இடைத்தேர்தல்: மூன்று தொகுதிகளில் வாக்குப்பதிவு ஆரம்பம்!

Ontario மாகாணத்தின் மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Ontario மாகாணத்தில் வெற்றிடமாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (03) காலை 9 மணி முதல் ஆரம்பித்தது.

Hamilton-Stoney Creek, Scarborough Southwest, York-Simcoe ஆகிய தொகுதிகளில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் குறைந்தது ஒரு தொகுதியிலாவது கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முதல்வர் Doug Ford தலைமையிலான Progressive Conservative கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், NDP மூன்றாவது தொகுதியை வெற்றி பெறும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது..

Progressive Conservative கட்சியைச் சேர்ந்த Neil Lumsden அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, Hamilton-Stoney Creek தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scarborough Southwest தொகுதியில் NDP, Liberal ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் Caroline Mulroney பதவி விலகியதை தொடர்ந்து, Progressive Conservative கட்சி York-Simcoe தொகுதியை மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 9 மணி வரை பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், தேர்தல் முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக ஆரம்பிக்கும் என Ontario தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

Related posts

கனடாவுக்கு அடுத்த வாரம் விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி

மதுபான விற்பனைக்கான தடைகளை குறைக்க மாகாணங்கள் இணக்கம்?

Lankathas Pathmanathan

பொது விசாரணைக்கு தலைமை தாங்குபவரை கண்டறியும் முயற்சி தொடர்கிறது!

Lankathas Pathmanathan

Leave a Comment