தேசியம்
செய்திகள்

கனடாவில் புதிய $20 பணித்தாள் அறிமுகம்: மூன்றாம் Charles மன்னரின் படம் வெளியீடு!

கனடாவின் புதிய $20 தாளில் மூன்றாம் Charles மன்னரின் படம் இடம்பெற்றது.

கனடிய மத்திய வங்கி, அரசர் மூன்றாம் Charles மன்னரின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்ட புதிய $20 பண தாளை வியாழக்கிழமை (03) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem இந்தப் புதிய பண தாள் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

மறைந்த இராணி இரண்டாம் Elizabeth படத்திற்கு பதிலாக, தற்போது British பேரரசின் அரசராக இருக்கும் மூன்றாம் Charles மன்னரின் படம் இதில் அச்சிடப்பட்டுள்ளது.

திருட்டு பணத்தாள்களை தடுக்கும் வகையில், ஒளியின் திசைக்கேற்ப மாறும் பாதுகாப்பு அம்சங்கள் (dynamic security) இதில் இணைக்கப்பட்டுள்ளன.

கனடாவின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் Vimy Ridge போர் நினைவுச் சின்னத்தின் உருவமும் இந்த தாளில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.

மன்னர் Charles பதவியேற்ற பின்னர் அவரது படத்துடன் வெளியாகும் கனடாவின் முதல் முக்கிய பணத்தாள் இதுவாகும்.

Related posts

கனடிய பிரதமரும் அமெரிக்க துணை அதிபரும் கலைந்துரையாடல்

Lankathas Pathmanathan

சரிந்து செல்லும் செல்வாக்கு குறித்த கருத்து கணிப்புகளை தொடர்ந்து மறுக்கும் Doug Ford

Lankathas Pathmanathan

வெளியானது Conservative கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

Gaya Raja

Leave a Comment