November 20, 2026
தேசியம்
செய்திகள்

Toronto மாநகர சபை குழுக்களில் Olivia Chow அதிரடி மாற்றம்!

Toronto மாநகர சபை குழுக்களில் நகர முதல்வர் Olivia Chow அதிரடி மாற்றங்களை அறிவித்தார்.

இதில் மீண்டும் நகரசபைக்கு தெரிவாகியுள்ள Scarborough Rouge River தொகுதியின் நகரசபை உறுப்பினர் நீதன் சான் உட்பட  உறுப்பினர்களுக்கு அதிகாரமிக்க பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Toronto போக்குவரத்து வாரியத்தில் (TTC) தமிழ் நகரசபை உறுப்பினர் நீதன் சான் நியமிக்கப்பட்டார்.

புதிய பதவி காலத்திற்கான Toronto மாநகர சபை குழுக்களின் தலைவர்கள், முக்கிய வாரிய உறுப்பினர்களின் பட்டியலை Olivia Chow வியாழக்கிழமை (19) வெளியிட்டுள்ளார்.

இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர சபை உறுப்பினர்களுக்கு மிக முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன் நகரின் பொதுப் போக்குவரத்து வாரியத்திலும் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் தலைவராக Scarborough Centre தொகுதியின் நகரசபை உறுப்பினர் Michael Thompson மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக, சமுதாய சேவைகள் குழுவின் தலைவராக Davenport தொகுதியின் நகரசபை உறுப்பினர் Alejandra Bravo நியமிக்கப்பட்டுள்ளார்.

திட்டமிடல், வீட்டுவசதிக் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சரும், Beaches – East York  தொகுதியின் புதிய நகரசபை உறுப்பினருமான Nate Erskine-Smith பொறுப்பேற்றுள்ளார்.

உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் குழுவின் தலைவராக நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நகரசபைக்கு திரும்பியுள்ள University – Rosedale தொகுதியின் நகரசபை உறுப்பினர் Mike Layton நியமிக்கப்பட்டுள்ளார்.

Toronto நகரின் பொதுப் போக்குவரத்து வாரியத்தில் அதிரடி மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

TTC தலைமை நிர்வாக அதிகாரி Mandeep Lali மீதான பணியிட நடத்தை விசாரணை சர்ச்சைகளுக்கு மத்தியில், TTC வாரியத்தை நகர முதல்வர் Olivia Chow மாற்றியமைத்துள்ளார்.

ஆறு உறுப்பினர்களாக இருந்த போக்குவரத்து வாரிய நகரசபை பிரதிநிதிகளின் எண்ணிக்கை நான்காக குறைக்கப்பட்டுள்ளது.

இதில் Scarborough – Guildwood தொகுதியின் நகரசபை உறுப்பினர் Paul Ainslie தலைவராகவும், அவருடன் இணைந்து தமிழரான நகரசபை உறுப்பினர் நீதன் சான், Alejandra Bravo,  Mike Layton ஆகியோர் போக்குவரத்து வாரிய உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய குடிமக்கள் வாரிய உறுப்பினர்கள் அனைவரும் நீக்கப்பட்டு, புதிய நான்கு நகர சபை உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற மூன்று புதிய குடிமக்கள் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் Toronto காவல்துறை சேவைகள் வாரியத் தலைவராக இருந்த Don Valley East தொகுதியின் நகரசபை உறுப்பினர் Shelley Carroll மீண்டும் வாரியத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் Etobicoke – Lakeshore தொகுதியின் நகரசபை உறுப்பினர் Amber Morley, Toronto Centre தொகுதியின் நகரசபை உறுப்பினர் Curran Stikuts ஆகியோர் காவல்துறை சேவைகள் வாரிய உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

Related posts

தமிழர்களின் திரையரங்கில் ஒரு வாரத்தில் மூன்று முறை துப்பாக்கி சுடு

Lankathas Pathmanathan

மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாமல் முடிவு

Lankathas Pathmanathan

Ontario அமைச்சரவையில் முதல்வர் Doug Ford அதிரடி மாற்றம்!

Lankathas Pathmanathan

Leave a Comment