கனடிய மத்திய அரசு மீது அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த வர்த்தக ஆலோசகர் கடுமையான வசைமாரியையும் மிரட்டல்களையும் விடுத்துள்ளார்.
கனடா அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்துள்ள வேளையில், அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த வர்த்தக ஆலோசகர் Peter Navarro, கனடிய மத்திய அரசு மீது “ஆணவம், நேர்மையின்மை” எனக் குற்றம் சாட்டி மீண்டும் கடுமையான வசைமாரியையும் மிரட்டல்களையும் விடுத்துள்ளார்.
சமூக வலைதளத்தில் Peter Navarro வெளியிட்டுள்ள இந்த பதிவு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வர்த்தக விவகாரத்தில் கனடாவின் ஆணவமும் நேர்மையின்மையும், தங்களின் நிலையை அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருப்பது வேறொரு ரகமாக உள்ளது என Peter Navarro பதிவிட்டுள்ளார்.
கனடிய வாகனத் துறையில் சீனாவின் முதலீடுகளை அதிகரிக்க கனடா பரிசீலிக்கலாம் எனப் பிரதமர் Mark Carney செவ்வாய்க்கிழமை (17) கூறியதற்கு பதிலடியாக கடுமையான குறிப்பை வெளியிட்டிருந்த Peter Navarro, வியாழக்கிழமையும் (19) தனது தாக்குதலை தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கனடாவுக்கு இது நல்ல முடிவைத் தராது என Peter Navarro எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என கனடியப் பேச்சுவார்த்தையாளர்கள் வலியுறுத்தியுள்ள அதே நாளில் இந்தக் கருத்து வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.
