November 20, 2026
தேசியம்
செய்திகள்

Toronto மாநகர சபையில் முக்கியக் குழுக்களில் நியமிக்கப்பட்ட பார்த்தி கந்தவேள்!

Toronto மாநகர சபையின் புதிய பதவிக்காலத்தில் தமிழ்-கனடிய நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேளுக்கு நிலைக்குழு, பிராந்திய வாரியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Toronto மாநகர சபையின் 2026–2030 புதிய பதவி காலம் ஆரம்பித்துள்ளது.

இதில் Toronto மாநகர சபையின் 2026–2030 புதிய பதவி காலத்திற்கான குழுக்கள், வாரிய உறுப்பினர்களின் நியமனங்கள் வியாழக்கிழமை (19) இறுதி செய்யப்பட்டது.

இதில் Scarborough Southwest தொகுதி நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் முக்கிய நிலைக்குழு, பிராந்திய வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பொருளாதார மேம்பாடு, கலாச்சார குழுவின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Toronto பிராந்திய பாதுகாப்பு ஆணைய வாரியத்தில் மாநகர சபையின் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Scarborough  சமூக மன்றத்தில் Scarborough Southwest நகரசபை உறுப்பினர் என்ற முறையில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.

Related posts

கனடாவில் நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

சூடான் தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த கனடா முடிவு

Lankathas Pathmanathan

Influenza A தொடர்பான 3 குழந்தை மரணங்கள் கிழக்கு Ontario-வில் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment