கனடாவின் தேடப்படும் 25 பிரதான குற்றவாளிகள் பட்டியல் வெளியானது.
கனடாவின் அதிகம் தேடப்படும் 25 குற்றவாளிகளின் புதுப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலை BOLO திட்டம் வியாழக்கிழமை (19) வெளியிட்டுள்ளது.
இதில் Toronto காவல்துறையால் தேடப்படும் ஆறு குற்றவாளிகள் அடங்குகின்றனர்.
இவர்களில் ஐந்து பேர் கொலை வழக்குகளில் தேடப்படுபவர்கள் என தெரியவருகிறது..
இந்த தேசியப் பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்துள்ள இருவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு மொத்தம் $1,50,000 வரை சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் முதலிடத்தில் Winnipeg காவல்துறையால் முதல் நிலை கொலை, கொலைச் சதி வழக்குகளில் தேடப்படும் 32 வயதான Satinderjit Singh என்கிற Goldie Brar உள்ளார்.
இவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு $2,50,000 வரை சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் 53 வயதான Kyle Prouse, மூன்றாவது இடத்தில் 32 வயதான Cody Rudifo ஆகியோர் Toronto காவல்துறையினரால் தேடப்படுகின்றனர்.
இவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கக்கூடிய அபாயகரமான நபர்கள் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், குற்றவாளிகளுக்கு போக்குவரத்து, தங்குமிடம் அல்லது பணம் கொடுத்து உதவுபவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினரின் எச்சரித்துள்ளனர்.
இதில் கனடாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் 28 வயதான் 28 வயதான Filmon Fesshaghirgis கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (19) இரவு Ontario மாகாண காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அன்றைய தினம் மாலை Winnipeg நகரில் RCMP , Winnipeg காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
BOLO திட்டத்தின் கனடாவின் அதிகம் தேடப்படும் 25 குற்றவாளிகளின் முழுப் பட்டியல்:
- Satinderjeet Singh – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Winnipeg காவல்துறை)
- Kyle Prouse – கொலை முயற்சி வழக்கில் தேடப்படுபவர் (Toronto காவல்துறை)
- Cody Rudifo – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Toronto காவல்துறை)
- Ayoub Mohamed – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Québec மாகாண காவல்துறை )
- Sabrina Agusto-Ramirez – கொலை வழக்கில் தேடப்படுபவர் (அமெரிக்க Marshals சேவை)
- Joseph Madore – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Ontario மாகாண காவல்துறை)
- Brayton Kennedy – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Ontario மாகாண காவல்துறை)
- Manpreet Singh – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Peel பிராந்திய காவல்துறை)
- Devondre Hall – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Toronto காவல்துறை)
- Gianpietro Tiberio – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Montreal காவல்துறை)
- Paul Bonnick – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Winnipeg காவல்துறை)
- Anthony Gillespie – கொலை முயற்சி வழக்கில் தேடப்படுபவர் (Waterloo பிராந்திய காவல்துறை)
- Dylan Denis – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Montreal காவல்துறை)
- Filmon Fesshaghirgis – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Ontario மாகாண காவல்துறை)
- Maaroof Bangi – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Niagara பிராந்திய காவல்துறை)
- Fadel Naim – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Toronto காவல்துறை)
- Tamah McLean – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Toronto காவல்துறை)
- Mason Jenkins – சட்டவிரோதமாக தப்பியோடிய வழக்கில் தேடப்படுபவர் (Ontario மாகாண காவல்துறை – OPP ROPE)
- Devin Norgaard – போதைப்பொருள், துப்பாக்கிச் சட்ட குற்றங்களுக்காக தேடப்படுபவர் (Edmonton காவல்துறை)
- Pedram Rabie – கொலை முயற்சி வழக்கில் தேடப்படுபவர் (Peel பிராந்திய காவல்துறை)
- Joshua Turner – சட்டவிரோதமாக தப்பியோடிய வழக்கில் தேடப்படுபவர் (Ontario மாகாண காவல்துறை – OPP ROPE)
- Yusuf Ali – கொலை முயற்சி வழக்கில் தேடப்படுபவர் (Winnipeg காவல்துறை)
- Gurkirat Singh – பாலியல் அத்துமீறல் வழக்கில் தேடப்படுபவர் (Delta காவல்துறை)
- Dellano Robertson-Berry – கொலை வழக்கில் தேடப்படுபவர் (Toronto காவல்துறை)
- Tommy Bernier-Thibault – தாக்குதல் வழக்கில் தேடப்படுபவர் (Lévis காவல்துறை)
