November 20, 2026
தேசியம்
செய்திகள்

Toronto மிருகக்காட்சிசாலையின் புதிய தலைவரானார் நீதன் சான்!

Toronto மாநகர சபையின் புதிய பதவிக்காலத்தில் தமிழ்-கனடிய நகரசபை உறுப்பினர் நீதன் சானுக்கு முக்கியத் தலைமைப் பொறுப்புகளும் வாரியப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

Toronto மாநகர சபையின் 2026–2030 புதிய பதவி காலம் ஆரம்பித்துள்ளது.

இதில் Scarborough–Rouge Park தொகுதி நகரசபை உறுப்பினர் நீதன் சானுக்கு பல முக்கியத் தலைமைப் பொறுப்புகள், குழுக்கள், வாரியங்களின் உயரிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

Toronto மிருகக்காட்சிசாலையின் புதிய தலைவராக நீதன் சான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார மேம்பாடு, கலாச்சார குழுவின் துணைத் தலைவர், Scarborough சமூக மன்றத்தின் துணைத் தலைவர் பதவிகளையும் நீதன் சான் பெற்றார்.

தவிரவும் Toronto போக்குவரத்து ஆணையகத்தின் உறுப்பினர் பதவிக்கும் அவர் நியமிக்கப்பட்டார்.

Toronto Hydro Corporation, Toronto சுகாதார வாரியம், Toronto, பிராந்திய பாதுகாப்பு ஆணையம், Ontario நகராட்சிகள் சங்கத்தின் வாரிய இயக்குனர் பதவிகளுக்கும் நீதன் சான் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரவு செலவுக் குழு,நியமனக் குழு, குடிமை நியமனக் குழு ஆகியவற்றுக்கும் அவர் நியமிக்கப்பட்டார்.

நகர முதல்வர் Olivia Chow பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய நியமனங்கள் குறித்து நீதன் சான் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவது முதல் பொருளாதார மேம்பாடு, சமூக சேவைகளை முன்னேற்றுவது வரை நகரத்தின் முன்னுரிமைகளை வடிவமைக்க இந்தப் பதவிகள் முக்கிய வாய்ப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வீட்டு வாடகை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

இரண்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

Lankathas Pathmanathan

அமெரிக்கா-Mexico-கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை நிராகரித்த Donald Trump!

Lankathas Pathmanathan

Leave a Comment