தேசியம்
செய்திகள்

கனடாவில் 27 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

கனடாவில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

வெள்ளிக்கிழமையுடன் கனடாவில் COVID மரணங்களின் எண்ணிக்கை 27,006 ஆக பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை மாத்திரம் 4,127 தொற்றுக்களை கனேடிய மாகாணங்களும் பிராந்தியங்களும் பதிவு செய்துள்ளன.

Albertaவில் 1,401 தொற்றுகளும் இரண்டு மரணங்களும், Ontarioவில் 807 தொற்றுகளும் 6 மரணங்களும்,
Quebecகில் 750 தொற்றுகளும் இரண்டு மரணங்களும், British Columbiaவில் 671 தொற்றுகளும் 3 மரணங்களும்,
Saskatchewanனில் 418 தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

தவிரவும் Manitobaவில் 56, New Brunswickகில் 14, Newfoundland and Labradorரில் 5, Nova Scotiaவில் 5 என தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

வெள்ளிக்கிழமையுடன் கனடாவின் மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 1,511,212ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கனடாவில் 210 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

பிரதமரை கொலை செய்ய மிரட்டல் விடுத்த குற்றத்தை ஒப்புக் கொண்ட Winnipeg நபர்?

Lankathas Pathmanathan

பணியின்போது உயிரிழந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு Blue Jays அணி அஞ்சலி

Lankathas Pathmanathan

Leave a Comment