தேசியம்
செய்திகள்

இதுவரையில் இல்லாத மோசமான COVID தொற்றின் அலை விரைவில்!

கனடாவில் இதுவரையில் இல்லாத மோசமான COVID தொற்றின் அலை எதிர்கொள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியான புதிய modelling தரவுகளில் இந்த எச்சரிக்கை வெளியானது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam புதிய modelling தரவுகளின் விவரங்களை வெளியிட்டார்.

கனடாவில் தினசரி பதிவாகும் தொற்று எண்ணிக்கை இந்த மாத இறுதியில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையை எட்டலாம் என புதிய modelling தரவுகள் சுட்டி காட்டுகிறது.

கனடா அடுத்த மாதம் 15 ஆயிரம் நாளாந்த தொற்றுக்களை பதிவு செய்யலாம் என Tam கூறுகிறார்.

கனடாவில் நாளாந்த தொற்று எண்ணிக்கை August மாத ஆரம்பத்தில் சுமார் 700 ஆக இருந்தது.

தற்போது அந்த எண்ணிக்கை 3,500 ஆக உயர்ந்துள்ளது. கனடாவின் COVID நிலைமை விரைவாக மோசமாவதை தடுப்பதற்காக 18 முதல் 39 வயதுக்கு உட்பட்ட அதிகமானவர்கள் தடுப்பூசி பெற வேண்டிய அவசர தேவையை வலியுறுத்தினார்.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வெளியிட்ட தரவுகளில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 74 சதவிகிதம் மற்றும் 30 வயதிற்குட்பட்டவர்கள் 77 சதவிகிதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

40 வயதிற்கு மேற்பட்டவர்களில் 82 சதவிகிதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

18 முதல் 39 வயதுக்கு உட்பட்ட மேலும் 1.6 மில்லியன் கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றால் கனடாவில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 80 சதவிகிதத்தை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடர்ந்து கனடாவில் அடையாளம் காணப்படும் Omicron தொற்றாளர்கள்!

Lankathas Pathmanathan

தொற்றின் பரவல் அதிகமாக உள்ள நாடுகளின் விமானங்களை கனடா நிறுத்த வேண்டும் – தொடரும் கோரிக்கைகள்!

Gaya Raja

கனடா தினத்தை இரத்து செய்வதை ஆதரிக்கவில்லை: Erin O’Toole

Gaya Raja

Leave a Comment