தேசியம்
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

Ontario சட்டமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

Ontario சட்டமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.பொது தேர்தல் முடியும் வரை சட்டமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க Doug Ford தலைமையிலான Progressive Conservative அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பொது தேர்தல் வாக்களிப்புக்கு இரண்டு வாரங்களுக்கு பின்னர் வரை சட்டமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் October 4ஆம் திகதி சட்டமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.June ஆரம்பத்தில் இருந்தே கோடை விடுமுறையில் உள்ள சட்டமன்றம், September 13 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க இருந்தது.

பொது தேர்தல் பிரச்சாரத்தில் ஒவ்வொரு கட்சிகளும் வெவ்வேறு கொள்கைகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ள நிலையில் அவை மாகாண அரசாங்கத்தின் சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்த முடிவு குறித்து அரசாங்கத்தின் சட்டமன்றத் தலைவர் Paul Calandra ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த முடிவை பொறுப்பற்றது என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Related posts

Manitoba எல்லையில் 406 KG போதைப்பொருள் மீட்பு!

Lankathas Pathmanathan

கனடாவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பம்

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment