தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்தும் அழைப்பு விடுத்துள்ளன.

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் David Johnstonனின் அறிக்கை செவ்வாய்க்கிழமை (23) வெளியானது.

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக David Johnston பரிந்துரைத்துள்ளார்.

கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து பொது விசாரணை அவசியமில்லை என David Johnston தெரிவித்தார்.

இந்த விடயத்தில் கனடியர்களுடன் தொடர்ச்சியான பொது உரையாடல்களை நடத்த David Johnston தகுந்த நபர் அல்ல என Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்.

பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்காத David Johnstonனின் முடிவு ஏமாற்றமளிக்கிறது என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.

இந்த தினத்தை கனடிய ஜனநாயகத்திற்கு ஒரு சோகமான நாள் என Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் Alain Therrien கூறினார்.

David Johnston இந்த விசாரணைக்கு பரிந்துரைத்தால், ஒரு விசாரணைக்கு ஆதரவளிப்பதாக அரசாங்ம் தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை!

Lankathas Pathmanathan

Albertaவில் தொடரும் தொற்று எண்ணிக்கை

Gaya Raja

கனேடிய பிரதமர் ஞாயிற்றுக்கிழமை காலை ஆளுநர் நாயகத்தை சந்திக்க ஏற்பாடு!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!