தேசியம்
செய்திகள்

இரண்டு கனடியர்களின் தொடர்ச்சியான தடுப்புக் காவலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வாதிடவில்லை

சீனாவின் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனடியர்களின் தொடர்ச்சியான தடுப்புக் காவலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong வாதிடவில்லை என ஆளுநர் நாயகம் David Johnston தெரிவித்தார்.

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை (23) வெளியான அறிக்கையில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக David Johnston பரிந்துரைத்துள்ளார்.

கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து பொது விசாரணை அவசியமில்லை என David Johnston தெரிவித்தார்.

முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong, சீன அரசாங்கத்தின் அதிகாரி ஒருவருடன் இரண்டு கனடியர்களின் தடுப்புக்காவல் குறித்து உரையாடிய போதிலும், அவர்களது சிறைவாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கவில்லை என David Johnston குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் வெளியான அறிக்கை மூலம் தான் நியாயப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாக Han Dong செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

Related posts

தனிமைப்படுத்த மறுத்த 800 பயணிகளுக்கு அபராதம்!

Gaya Raja

சட்ட மன்றத்திலிருந்து NDP உறுப்பினர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Saskatchewanனிலும் புதிய COVID கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!