இந்திய பாடகியின் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் கனடாவில் தலைமறைவாக உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய சந்தேக நபர் கனடாவுக்கு தப்பி வந்துள்ளதாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.
29 வயதான பாடகி Yashinder Kaur, May மாதம் 13-ஆம் திகதி கொல்லப்பட்டதாக Punjab காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தக் கொலையின் முக்கிய சந்தேக நபர் கனடாவுக்கு தப்பி வந்துள்ளதாக இந்திய காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
May 13 அன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட Yashinder Kaur பயணித்த வாகனம் ஒரு கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது.
ஆறு நாட்களுக்குப் பின்னர், நீருக்கடியில் சென்று தேடுபவர்கள் அவரது உடலை மீட்டனர்.
அவர் தலையிலும் மார்பிலும் இரண்டு முறை சுடப்பட்டிருந்ததை உடற் கூறாய்வு பரிசோதனை வெளிப்படுத்தியது.
இந்தக் கொலையின் ஒரு வாரத்திற்கு பின்னர் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில், கடத்தல், சட்டவிரோதமாக துப்பாக்கிகளை பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மூன்று பேரை, Punjabi காவல்துறை முன்னிறுத்தியது.
ஆனால் கொல்லப்பட்டவரை அறிந்தவரும், கனடாவில் நிரந்தர வசிப்பிட உரிமம் கொண்டவருமான ஒருவரே தங்கள் முக்கிய சந்தேக நபர் என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதில் பிரதான சந்தேக நபராக 37 வயதான Sukhwinder Singh Brar அடையாளம் காணப்பட்டார்.
அவர் கனடாவில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாக கூறப்படுகிறது .
காவல்துறையினர் கைப்பற்றிய இரண்டு துப்பாக்கிகளும் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட Yashinder Kaur, பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவருடன் சுமார் ஐந்து ஆண்டுகளாக தொலைதூர நட்பில் இருந்ததாகவும், அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஆனால் Sukhwinder Singh Brar, கனடாவில் ஏற்கனவே திருமணமானவர் எனவும் அவருக்கு குழந்தைகள் இருப்பது குறித்து Yashinder Kaur குடும்பத்தினர் பின்னர் அறிந்துகொண்டனர்.
சந்தேகத்திற்குரியவர்களிடம் நடத்தப்பட்ட “தீவிர விசாரணை”, பாடகியின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், வாடகை வாகன ஓட்டுநர்களின் வாக்குமூலங்கள், பயண ஆவணங்களின் தடயங்கள் ஆகியவை தங்களை முக்கிய சந்தேக நபரை கண்டறிய வழிவகுத்ததாக Punjab காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணையின்போது, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரதான குற்றவாளியின் தந்தை, Sukhwinder Singh Brar இந்தியா சென்றிருந்ததையும், அக்குற்றத்தில் தாங்கள் உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார்.
தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு Sukhwinder Singh Brar விடுத்த கோரிக்கையைYashinder Kaur நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தச் கொலை இந்தியா முழுவதும் முக்கிய செய்தியாகியுள்ளது.
இந்தக் கொலையில் கனடியரின் தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் கனடா இதில் தலையிட வேண்டும் என பலியான பாடகியின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
Yashinder Kaur காணாமல் போனதாக தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே, சந்தேக நபர் நேபாளம் வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியதற்கான ஆதாரம் காவல்துறையிடம் உள்ளதாக Punjab காவல்துறை உதவி துணை ஆணையர் Inderjeet Singh Bopara கூறினார்.
சந்தேக நபர் தற்போது கனடாவில் இருக்கிறாரா என்பது இதுவரை உறுதியாகவில்லை.
இந்த விசாரணை குறித்து தங்களிடம் எந்த விபரங்களும் பகிரப்படவில்லை என் RCMP கூறியது.
