விண்வெளியில் பயணித்த முதல் கனடியர் என்ற பெருமை பெற்ற Marc Garneau காலமானார்.
76 வயதான இவர், முன்னாள் மத்திய அமைச்சராவார்.
சிறிய காலம் சுவையீனமாக இருந்த அவர் புதன்கிழமை (04) மரணமடைந்ததாக அவரது குடும்பம் உறுதிப்படுத்தியது.
விண்வெளிக்கு சென்ற முதல் கனடியர் என்ற பெருமையை பெற்ற Marc Garneau, மூன்று விண்வெளி ஆராய்ச்சி பயணங்களை மேற்கொண்டார்.
2001 முதல் 2005 வரை, அவர் கனடிய விண்ணாய்வு நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார்.
முதலில் Montreal நகர Westmount–Ville-Marie தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 2008-ஆம் ஆண்டு தெரிவான அவர், 2015 முதல் Notre-Dame-de-Grâce–Westmount தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
2023-ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சராகவும், போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாடாளுமன்றத்தில் புதன் மாலை ஒரு நிமிட மௌனம் கடைபிடிக்கப்பட்டது.
அவரது மறைவுக்காக அனைத்து அரசியல் தரப்பினரிடமிருந்தும் கட்சி பேதமின்றி அனுதாபங்கள் வெளியாகின்றன.
Marc Garneau தமது நாயகன் என கனடிய விண்வெளி வீரர்கள் தமது அஞ்சலியில் குறிப்பிடுகின்றனர்.