தேசியம்
செய்திகள்

தமிழ்ச் சமூக மைய திட்டத்தில் பிரதான அங்கீகாரம்?

தமிழ்ச் சமூக மைய திட்டத்தில் இரண்டு பிரதான அங்கீகாரங்கள் கிடைக்கப்பட்டன.

இதன் மூலம் தமிழ்ச் சமூக மையத்தின் பயணத்தில் மேலும் ஒரு பிரதான மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

தமிழ்ச் சமூக மையத்திற்கான உத்தியோகபூர்வ திட்டத் திருத்தம் (Official Plan Amendment) , பயன்பாட்டு சட்டத் திருத்தம் (Zoning By-law Amendment) ஆகியவை Scarborough Community Council-இல்  வியாழக்கிழமை (09) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக, இந்த மாத இறுதியில் இவை Toronto நகரசபையின் பரிசீலனைக்கு செல்ல உள்ளன.

தமிழ்ச் சமூக மைய இயக்குனர் சபை இந்தத் தகவலை வெளியிட்டது.

இந்த அங்கீகாரம், திட்டமிடல், அனுமதி பெறும் செயல்முறையில் மற்றுமொரு முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளதுடன், அடுத்த ஆண்டு சமூக மையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் இலக்கை மேலும் சாத்தியமாகியுள்ளது என இயக்குனர் சபை மகிழ்ச்சி தெரிவித்தது.

இந்த முக்கிய கட்டத்தின் பின்னணியில் பல ஆண்டுகளாக சமூகத்தின் தொடர் ஆதரவு, திட்டமிடல், நகர அதிகாரிகள், ஆலோசகர்களுடன் நெருக்கமான செயல்முறை, தமிழ்ச் சமூக மையம் குறித்த தமிழர் சமூகத்தின் நம்பிக்கை ஆகியவை அடங்கியுள்ளன என இயக்குனர் சபை கூறியது.

Toronto நகர முதல்வர் Olivia Chow-வை புதன்கிழமை (08) சந்தித்த தமிழ் சமூக மைய குழு, சமூக மைய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நகர முதல்வருக்கு விளக்கமளித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காவல்துறையினரால் பறிமுதல்

Lankathas Pathmanathan

இந்தியாவை சேர்ந்த மாணவி கொள்ளை முயற்சியின் போது கொலை

Lankathas Pathmanathan

கனடியர் இந்தியாவில் மரணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment