தேசியம்
செய்திகள்

தீப்பற்றி எரிந்த இரு வாகனங்களில் கருகிய நிலையில் சடலங்கள் கண்டெடுப்பு!

Etobicoke, Scarborough நகரங்களில் எரியும் வாகனங்களுக்குள் 2 சடலங்கள் மீட்கப்பட்டன.

இருவேறு இடங்களில், தீப்பற்றி எரிந்த வாகனங்களுக்குள் இருந்து இரண்டு சடலங்களை Toronto காவல்துறையினர் மீட்டனர்.

செவ்வாய்க்கிழமை (22) நள்ளிரவுக்கு முன்னரும் பின்னரும் இந்த சம்பவங்கள் நிகழ்ந்தன.

சில மணி நேர இடைவெளியில் கண்டறியப்பட்ட இந்த இருவேறு மரணங்கள் குறித்து Toronto காவல்துறையினர் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Scarborough நகரில் முற்றிலும் கருகிய நிலையில் நின்றிருந்த வாகனத்திற்குள் இருந்து ஒரு சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்

Etobicoke பகுதியில் வாகனம் ஒன்றில் தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய சோதனையில், வாகனத்தின் உள்ளே ஒரு நபர் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரு மரணங்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா, அல்லது இவை திட்டமிட்ட கொலைகளா என்ற கோணத்தில் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

இதில் உயிரிழந்தவர்களின் அடையாளம், பாலின விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

Related posts

12 மில்லியன் கனடியர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கு நீங்களும் தகுதியுள்ளவரா?

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கத்திக்கு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் $10.2 பில்லியன் மேலதிக வருமானம்

Lankathas Pathmanathan

 Torontoவில் புதிய வெறுப்பு குற்ற விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment